ஜேர்­ம­னிய பிராங்போட் நக­ரி­லுள்ள ஹோட்டல் அறை­யொன்றில் இடம்­பெற்ற பேய் ஓட்டும் நட­வ­டிக்­கையின் போது கொரிய பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது 15 வயது மகன் உட்­பட 5 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பிராங்போட் நக­ரி­லுள்ள இன்­டர்­கொன்­ரி­னென்டல் ஹோட்­டலில் இர­வொன்­றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாட­கைக்கு அறை­யொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்­கி­ரமம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்­கி­ர­மத்தின் போது குறிப்­பிட்ட பெண் கட்­டிலில் கட்டி வைக்­கப்­பட்டு மோச­மாக அடித்து உதைக்­கப்­பட்­டுள்ளார்.

இதன்­போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியில் கேட்­பதைத் தடுக்க அந்தப் பெண்ணின் வாயில் துவாய் ஒன்று திணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அந்தப் பெண் மூச் சுத் திணறி உயி­ரி­ழந்­துள்ளார்.

கொரி­யா­வி­லி­ருந்து குறிப்­பிட்ட பெண் உட்­பட 6 பேர் 6 வாரங்­க­ளுக்கு முன்னர் ஜேர்­ம­னியை வந்­த­டைந்­தி­ருந்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 44 வயது பெண்ணொருவரும் அவரது 21 வயது மகன் மற்றும் 19 வயது மகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.