ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகிலுள்ள குளத்தில்  வீழ்ந்த இருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23 வயதான இளைஞர் ஒருவரும், 19 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு குளத்தில் வீழ்ந்துள்ளனர்.

குறித்த இருவரும் புபுரஸ்ஸ மற்றும் மதுரட பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா? அல்லது தவறி விழுந்துள்ளனரா? என பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.