ஈ.டி.ஐ. நிறுவன மோசடி : ஆணைக்குழுவின் அறிக்கைகளின் பிரகாரம் நடவடிக்கை  

Published By: Jayanthy

13 Oct, 2020 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிரிசிங்க  ட்ரஷ்ட் இன்வெஷ்  லிமிடெட்  நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள  அறிக்கைகளின் பிரகாரம் நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை  அங்கிகாரம் வழங்கியுள்ளது.  குறித்த  நிதி  நிறுவனத்தில் மோசடிகள் இடம் பெற்றுள்ளமை அறிக்கை ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எதிரிவிங்க ட்ரஷ்ட்  இன்வெஷ்ட்மென்ட்  லிமிடெட் நிறுவனத்தில்  இடம் பெற்றதாக குறிபபிடப்படும் நிதி மோசடி, சட்டவிரோத செயற்பாடுகள்  தொடர்பில்  பரிசீலனை செய்ய ஜனாதிபதி   ஓய்வுப்பெற்ற  உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறி தலைமையிலான  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை கடந்த ஜனவரி மாதம்9 ஆம் திகதி நியமித்தார்.

குழுவினர் பரீசீலனை செய்து  அறிக்கையினை கடந்த 6 ஆம்  திகதி  ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். இதில் ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும்  பரிந்துரைகள் மூலம் கம்பனிச்சட்டம்,  நிதி  கம்பனி தொடர்பான சட்டம், நிதி மோசடிச்சட்டம், நிதியறிக்கை வெளியிடும்  சட்டம், காணி வெளிநாட்டவர்களுக்கு  ஒப்படைத்தல்  போன்ற  சட்ட ரீதியான வரையறைகள்  போன்று தண்டனை சட்டக் கோவையின் கீழ் பல குற்றங்கள்  இடம் பெற்றுள்ளதாக  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதிக் கம்பனிகளின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல்களுக்காக இலங்கை மத்திய வங்கிகள் தவிர்ந்த  நிதி நிறுவணங்களின்  கண்காணிப்புத் திணைக்களம்  முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைளை முன்னெடுக்க  ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு  அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை யோசனைகளாவன,

 எதிரிசிங்க ட்ரஷ்ட் லிமிடெட்  நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மற்றும் சொத்துப் பரிமாற்றல்களில் இடம் பெற்றுள்ள மோசடிகள் தொடர்பாக  மேற்குறிப்பிடப்பட்ட  விசாரணை  ஆணைக்குழுவினால்  வழங்கப்பட்ட  பரிந்துரைகளை   நடைமுறைப்படுத்துவற்காக  துரிதகதியில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள  சட்டமா அதிபரிடம் ஒப்படைத்தல்,

மத்திய  வங்கியின் வங்கிகள் தவிர்ந்த  நிதி  நிறுவனங்களின் கண்காணிப்புகளுக்காக  திணைக்களத்தை   முழுமையாக மறுசீரமைத்தல்,

நிதி நிறுவனங்களின் ஒழுங்குப்படுத்தல்களுக்காக  புதிய நிறுவன கட்டமைப்பொன்றை  உருவாக்குமாறு நிதியமைச்சுக்கு   அறிவித்தல்.

நீதி அமைச்சர் குறித்த விசாரணை  ஆணைக்குழு அறிக்கை மற்றும்  அதற்கமைய  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பித்தல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56