பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அரசை வற்புறுத்தும் மாவை

Published By: Jayanthy

13 Oct, 2020 | 05:15 PM
image

ஊடகவியலாளரதும், ஊடகத்துறையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முல்லையில் ஊடகவியலாளர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிறா விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மரம் வெட்டுதல், மரங்கடத்தல், காடழிப்பு முறைப்பாடுகளை அரசும், வனவளத் திணைக்களமும் தடுக்கத் தவறி வந்திருக்கிறது.
மக்களின் முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய கொள்ளை முயற்சிகள் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெற்றுவருவதாக செய்திகள் வருகின்றன. 
இதனால் அப் பிரதேசங்களுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகியோர் சட்ட விரோதிகளால், கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மட்டுமல்ல ஏனைய ஊடகவியலாளரதும், ஊடகத்துறையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடன் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம். அத்தோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமும், இழப்பீடும், நியாயமும் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசை வற்புறுத்துகிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15