இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published By: Robert

10 Dec, 2015 | 04:54 PM
image

இலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26.11.2015 அன்று இலங்கை மன்னார் பாக்குநீர் கடற்பரப்புக்குள் ஒரு இந்திய இலுவைப் படகில் வந்த ஆறு இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்தும் இவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ முன்னிலையில் இவர்களை ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 21.12.2015 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி கட்டளையிட்டார்.

(வாஸ் கூஞ்ஞ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58