எவன்கார்ட் மெரிடைம்ஸ் நிறு­வ­னத்­துக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லான ஒப்­பந்­தங்­க­ளை இரத்துச்செய்து, குறித்த நிறு­வனம் முன்­னெ­டுத்து வந்த அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கடற்­ப­டை யின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று புதன்­ கி­ழமை மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற விஷேட கலந்­து­ரை­யா­டலின் போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.


கடந்த 09ஆம் திகதி இடம்­பெற்ற விஷேட அமைச்­ச­ரவை கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட விஷேட முடிவின் அடிப்­ப­டையில், எவன்கார்ட் நிறு­வன விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து தரப்­பி­னரும் நேற்று விஷேட கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டு­வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­ப­டியே இந்த கூட்டம் இடம்­பெற்­றது.


நேற்று மாலை ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்­க­ளான விஜே­தாஸ ராஜ­பக்ஷ, பாட்­டலி சம்­பிக்க ரண­வக, ராஜித சேனா­ரத்ன ஆகி­யோ­ருடன் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன், கடற்­படை தள­பதி ரவீந்ர சீ விஜே குண­வரத்ன, சட்ட மா அதிபர் யுவஞ்­சன வண­சுந்­தர, ரக்ன லங்கா நிறு­வன அதி­கா­ரிகள் உள்­ளிட்டோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.


இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் தெரி­வித்­த­தா­வது,


' இந்த கூட்­டத்தின் போது கடற்­படைத் தள­ப­தி­யினால் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிகத் தெளி­வாக விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. அத்­துடன் அதன் சட்ட விரோத தன்மை அவ­ரினால் மிகத் தெளி­வாக தெளிவு படுத்­தப்­பட்­டது. இறு­தியில் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன எவன்கார்ட் நிறு­வ­னத்­து­ட­னான அனைத்து ஒப்­பந்­தங்­க­ளையும் ரத்து செய்து அவர்கள் முன்­னெ­டுத்து வந்த அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கடற்­ப­டை­யினர் முன்­னெ­டுக்க வேண்டும் என தீர்­மா­னித்தார். கடற்­படைத் தள­பதி அதற்கு இணக்கம் தெரி­வித்தார்.

தம்மால் அதனைச் எய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார். உடனடியாக இந்த உத்தரவு நடை முறைக்கு வருகின்றது. அதன்படி கடற்படை இந்த நடவடிக்கையினை அவர்களுக்குள் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுப்பர்.' என தெரிவித்தார்.