அழகான பெண்களை முத்தமிடுவேன்; அமெரிக்க ஜனாதிபதி

Published By: Digital Desk 3

13 Oct, 2020 | 04:11 PM
image

டொனால்ட் ட்ரம்ப் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அழகான பெண்களை முத்தமிடுவேன் என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ட்ரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு இராணுவ வைத்தியசாலையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டார்.  4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.  தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவில் ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.  இதனை வெள்ளை மாளிகை வைத்தியர் சீன் கான்லே உறுதிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து பிரசார பணிகளில் முழு வீச்சில் ட்ரம்ப் இறங்கியுள்ளார்.  இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டோ சான்போர்டு சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய ட்ரம்ப், சான்போர்டில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.

முகக்கவசம் அணியாமல் சென்று,அணி திரண்டு இருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு கையிலிருந்த முகக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளார். 

Photo:Reuters

இதன்பின்னர் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் பேச தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை வெற்றி கொள்ள போகிறோம்.  வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம்.

நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன்.  பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் நடந்து செல்வேன்.  

நான் அங்கு சென்று கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன்.  

ஆடவரையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன் என கூறினார்.

நான் ஒன்றும் வயது முதிர்ந்தவன் கிடையாது.  நான் இளமையானவன்.  

நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன் என ட்ரம்ப் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17