தனிமைப்படுத்தல் முகாமாக மாறும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி

Published By: Digital Desk 4

13 Oct, 2020 | 09:07 AM
image

  அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு, அதற்கான முன் ஆயத்த வேலைகளை இரானுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியினை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கான நடவடிககையின் பொருட்டு இரானுவத்தினருக்கு கல்லூரி நிருவாகம் உத்தியோக பூர்வமாக திங்கட்கிழமை(12) கையளித்து வைத்தனர்.

 இதனையடுத்து, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி வளாகம்  கொரோன தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படவுள்ளதுடன், அதன் அருகிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இரானுவத்தினர் மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்டோர் தங்கியிருந்து கடமையில் ஈடுபடவுள்ளனர்.

 நாட்டில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக, இதற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்ககள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுமாறும் இரானுவத்தினரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.  

 கல்லூரியின் பயிற்சி ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதனையடுத்து அதனை, சுத்தம் செய்யும் நடவடிக்கையிலும், தொற்று நீக்கம் செய்யும் பணியிலும் இரானுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

250 படுக்கைகளைக் கொண்ட இக்கல்லூரியின் பெண் மாணவர்கள் விடுதி பிரதான தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படவுள்ளது.

 அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியை, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவது தொடர்பிலும், இம்முகாமின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சுகாதார செயற்பாடுகள் தொடர்பிலும் கல்விக் கல்லூரி நிருவாகம், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

 இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியின் நாலாபுறங்களிலுமுள்ள எல்லைகளில் பொது மக்களின் வசிப்பிடங்கள் காணப்படுவதால், இக்கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் இங்கு அமைவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03