உள்ளூராட்சி மன்றதேர்தல் தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு அமையவே நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.  

குறித்த தேர்தல் எதிர்வரும் வருடம் ஆரம்ப பகுதியில் நடைபெறும் என இதன்போது தெரிவித்துள்ளார்.   

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் நேற்றிரவு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதியை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்