வனவளத்திணைக்களமும் வெடுக்குநாறியில் அட்டகாசம் - திருப்பியனுப்பப்பட்ட  பக்தர்கள்

Published By: Digital Desk 4

12 Oct, 2020 | 12:16 PM
image

நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நெடுங்கேணி பொலிசார் மற்றும் தொல்பொருட்திணைக்களங்களால் தடை ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் தனது அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் ஆலயத்திற்கு சென்ற பொதுமக்களை நெடுங்கேணி பிரிவை சேர்ந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலயத்திற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதுடன், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். 

நேற்று விடுமுறை தினமாதலால் அதிகமான பொதுமக்கள் ஆலயத்தை தரிசிக்க சென்ற நிலையில் வனவளத்திணைக்களத்தின் செயற்பாட்டினால் அவர்கள் ஏமாற்றத்துடன், திரும்பியிருந்தனர்.

இதுவரை ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரே தடையை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் அரச திணைக்களங்களால் இவ்வாறான தடை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அக்கறையில்லாத அரசியல்வாதிகள்.

வெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் வாதிகளும் அக்கறையற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வாரமளவில் கூட ஆலயத்தில் நீண்டகாலமாக பூசை செய்து வந்த பூசாரியை ஆலய வளாகத்திற்குள் செல்லவேண்டாம் என்றும், சென்றால் கைதுசெய்வோம் என்றும் நெடுங்கேணி பொலிசார் அச்சுறுத்தியிருந்தனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினை அபகரிப்பதற்காக பல்வேறு நெருக்குதல்களும், தடைகளும் தொல்பொருட்திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக அரசியல் வாதிகள் அக்கறை செலுத்தாமல் நழுவிச்செல்வதாக பொதுமக்களால் குற்றம்சாட்டப்படுகின்றது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55