12 வருடங்களின் பின் கொலையாளி கைது

Published By: Gayathri

12 Oct, 2020 | 12:00 PM
image

(செய்திப்பிரிவு)

மாலபே பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி சாரதியொருவரின் கொலையுடன் தொடர்புடைய கொலையாளி தேடப்பட்டு வந்த நிலையில், 12 வருடங்களின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸார் தலாஹேன மயான பூமிக்கருகில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த  சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் குறிப்பிட்டனர்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாலபே பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார். 

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஜாகொட கமகே உதய ரத்நாயக்க எனப்படும் தம்மிக்க எனும் 24 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே 12 வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04