துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை ; மூவர் கைது - 10 துப்பாக்கிகள் மீட்பு 

Published By: Digital Desk 4

12 Oct, 2020 | 12:07 PM
image

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) தேசிய புலனாய்வு பிரிவினர் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். 

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம்  சம்பவதினமான  நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய புலனாய்வு பிரிவினர் திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன்கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டு, அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர் 

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும்  பாகமான துப்பாக்கியின்  மரத்திலான பிடியை தயாரித்து வந்த  தச்சு தொழிலாளியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சரம்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர் 

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40