திவதியா - பராக்கின் அதிரடியுடன் ஐதராபாத்தின் கனவு கலைந்தது

Published By: Vishnu

11 Oct, 2020 | 07:24 PM
image

ராகுல் திவதியா மற்றும் ரியான் பராக்கின் அதிரடி ஆட்டம் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது போட்டி இன்று பிற்பகல் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்தனர்.

அணியில் அதிகபட்சமாக டேவிட் வோர்னர் 48 ஓட்டங்களையும், மனீஷ் பாண்டே 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் பின்னர் 159 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தன.

அதனால் ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 9.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்று தடுமாறியது.

பென் ஸ்டோக் 5 ஓட்டங்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 5 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 16 ஓட்டங்களுடனும், உத்தப்பா 18 ஓட்டங்களுடனும், சஞ்சு சம்சன் 26 ஓட்டங்களுடனும் முறையே ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ரியன் பராக் மற்றும் ராகுல் திவாதியா ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஐதராபாத் அணியின் வெற்றிக் கனவானது கலைந்து போனது.

இறுதியாக ராஜஸ்தான் அணி 19.5 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து ஐதராபாத் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ராகுல் திவாதியா 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களையும், ரியன் பராக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதேவ‍ேளை அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35