119 கொரோனா நோயாளர்கள் தப்பிச் சென்றனரா? - அஜித் ரோஹன விளக்கம்

Published By: Vishnu

11 Oct, 2020 | 05:09 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 119 நோயாளர்கள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ள 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. 

ஆடை தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த நபர்களுடன் தொடர்பினை பேணியதாக கருதப்படும் நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டு தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் எவரேனும் இன்னமும் சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களை உடனே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22