பொய்யான முறைப்பாடு செய்த ஒருவர் கைது

Published By: Digital Desk 4

11 Oct, 2020 | 04:19 PM
image

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உப தபாலகமொன்றில் கடமையாற்றும் தபால் ஊழியர் ஒருவர் தனது 3 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்ததன் பேரில் பசறை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த தபால் ஊழியர் பகுதி நேரமாக கணணி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியை செய்து வந்துள்ளார். 

அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு தொகை பணத்தை வங்கியிலிருந்து மீள எடுத்து சம்பள பணத்தை ஊழியர்களுக்கு வழங்கி விட்டு மீதி 3 இலட்சம் ரூபாவுடன் பசறை வீதி 8 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுள்ளார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை தாக்கி மிளகாய் தூளை முகத்தில் தூவி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

எனினும் அப்பகுதியில் உள்ள சீ.சீ.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரியை விசாரித்த போது அவர் கூறியது பொய் என தெரியவந்தது. குறித்த பணத்தை அவர் தனது மருமகனிடம் கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. 

தான் வட்டிக்கு கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க இவ்வாறு நாடகமாடியது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் பொய்யான தகவலை வழங்கி முறைப்பாடு பதிவு செய்ய முயன்றமைக்கு எதிராக பசறை பொலிஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00