தமிழக மீனவர்கள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக இராமேஸ்வர மீனவர் அமைப்பின் தலைவர் என்.ஜே. போஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரியே குறித்த தொடர்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 22, 26 மற்றும் 28ஆம் திகதிகளில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது 103 படகுகளுடன் 77 மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடற்படையினரால் சேதமாக்கப்பட்ட 18 படகுகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.