வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை தவறிவிட்டது கோத்தா அரசாங்கம்: சுட்டிக்காட்டுகிறார் தயான் ஜயத்திலக்க

Published By: J.G.Stephan

11 Oct, 2020 | 10:51 AM
image

(ஆர்.ராம்)
தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அணிசேராக் கொள்கையிலிருந்து விலகியிருப்பது கவலை அளிப்பதோடு அண்மைய காலத்தில் வெளியுறவுக்கொள்கையில் நடுநிலை தவறிவிட்டது என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், பிரபல அரசியல் விமர்சகருமான கலாநிதி. தயான் ஜயத்திலக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார். 

உலக வல்லரசுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில்  பனிப்போர் வலுத்துள்ள நிலையிலும், பிராந்திய தலைமை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள சூழலும் சீனா உயர்மட்டக்குழு ஜனாதிபதி, பிரமருடன் சந்திப்புக்களை நடத்தியிருப்பதானது புதுடெல்லிக்கும், வொஷிங்டனுக்கும் மாறுபட்ட தோற்றப்பாட்டையே பிரதிபலிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கைக்கான அமெரிக்க தூதூதுவர் அலெய்னா டெப்லிஸ், மற்றும் சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் லூ சொங் ஆகியோர் பகிரங்கமாக பரஸ்பர கருத்துமோதல்களில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைச் கடுமையாகச் சாடி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். இவ்வாறாதொரு தணருத்தில் சீனாவின் உயர் மட்டக்குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. ஏகநேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினரும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். 

இவ்விதமான நிகழ்வுகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் பூகோள அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பனிப்போர் வலுத்துள்ளது. அரசியல், பொருளாதார விடயங்களில் இருநாடுகளும் பகிரங்கமாகவே பொதுவெளியில் மோத ஆரம்பித்துள்ளன. அதேபோன்று தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமைநாடாக இருக்கும் இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் இடையே எல்லையில் முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. 

இதனைவிடவும், இலங்கையில் உள்ள அமெரிக்க , சீன தூதரங்களின் அதிகாரிகள் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்து மோலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறானதொரு நிலைமையில் தான் சீன கம்னியூச கட்சியின் மத்தய குழு உறுப்பினரும், சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் காரியாலய பணிப்பாளருமான யங் ஜியேச்சி தலைமையிலான உயர் மட்டக்குழுவொன்று இலங்கைக்கு வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துள்ளது. 

தற்போதைய தருணத்தில் இவ்வாறானதொரு உயர்மட்ட அதிகாரியைத் தலைமையான சீனக் குழு இலங்கைக்கு வந்திருக்க வேண்டியதில்லை என்று நான் கூற விளையவில்ரை. ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் வெளிநாடுகளுடனான இருதரப்பு உறவுகளை சரியாக கையாண்டிருக்குமாயின் எதிர்மறையான பிரதிபலிப்புக்களை பெற வேண்டிய சூழலுக்குள் தள்;ளப்பட்டிருக்காது. 

அதாவது, அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும் சீனா முரண்பட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவும், இந்தியாவும், யப்பானும், அவுஸ்திரேலியாவும் கூட்டிணைந்து பல்வேறு முக்கிய விடயங்களில் செயற்படுகின்றன.  அவ்வாறான நிலையில் சீனக்குழுவின் வருகை அந்த நாடுகளுக்கு சந்தேகத்தினை இயல்பாகவே ஏற்படுத்தும் என்பதே யதார்த்தமாகும். 

ஆனாலும் அவ்விதமான இக்கட்டான நிலைமையொன்று ஏற்பாடாதிருக்க வேண்டுமாயின் இலங்கை ஏனைய நாடுகளுடனான உறவை மத்தியஸ்த்துடன் பேணியிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான நிலைமையொன்று காணப்படாதிருக்கின்றமை தான் கவலை அளிப்பதாக உள்ளது. 

1968ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமை வகித்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த அணிசேராக் கொள்கையை பின்பற்றாது, அனைத்து தரப்புக்களுக்கும் சம பங்களித்து இலங்கை ‘நடுநிலையாக” செயற்பட போகின்றது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச்சபையிலேயே பகிரங்கமாக தெரிவித்தார். எமது நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அத்திவாரமாக இருந்த அணிசேராக் கொள்கையை கைவிட்டமை மிகத்தவறான தீர்மானமாகும். 

அவ்வாறிருக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் வழி சந்திப்பின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை பின்னர் மறைக்கப்பட்டது.

அதன்பின்னர், விடயத்திற்கு பொறுப்பான இராஜங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பாராளுமன்றத்திலும், வெளியிலும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்ல, இந்தியாவையும், பிரதமர் மோடியையும் கூட கடுமையாக சாடியிருந்தார். எனினும் அரசாங்கம் அதுபற்றி கரசனை கொள்ளவுமில்லை. ஆகவே சரத் வீரசேகரவின் கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துக்களாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. 

ஆகவே, இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கும் எதிரான நடைமுறையொன்றை கடைப்பிடிக்க விரும்புகின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும் உள்நாட்டில் வல்லரசு நாடுகள் இரண்டடினதும் தூதர்களும், அதிகாரிகளும் பரஸ்பரம் மோதி; கொள்கின்றார்கள். அதுபற்றி அரசாங்கம் கவனம் கொண்டதாகும் இல்லை. 

இவ்வாறானதொரு சூழலில் சீன உயர்மட்டக்குழு இலங்கையின் நலன்களுக்காகவே உத்தியோக பூர்வமான விஜயங்களை மேற்கொண்டாலும், அது புதுடெல்லிக்கும், வொஷிங்டனுக்கும் மாறுபட்ட தோற்றப்பாட்டையே பிரதிபலிக்கும். இந்த நிலைமைக்கு  தற்போதைய ஆட்சியாளர்கள் வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமை தவறியமையே அடிப்படைக் காரணமாகின்றது. வல்லரசு நாடுகளுடனும், பிராந்திய தலைமை நாட்டுடனும் சமாந்தர, நடுநிலை இருதரப்பு உறவை பேணுவதில் அரசாங்கம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17