மிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கை கோரும் நீதிமன்றம்

Published By: Robert

20 Jul, 2016 | 09:39 AM
image

மிக் தாக்­குதல் விமான கொள்­வ­னவு தொடர்­பான கொடுக்கல் வாங்­கல்கள் சம்­பந்­தப்­பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்­பந்­த­மாக விமா­னப்­ப­டையின் சட்­டப்­ப­ணிப்­பா­ள­ரிடம் விட­யங்­களை கேட்­ட­றிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, எதிர்­வரும் 25ஆம் திகதி இது சம்­பந்­த­மாக விப­ர­மான அறிக்­கையை தாக்கல் செய்­யு­மாறு நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்ளார்.

வழக்­கிற்கு தேவை­யான முக்­கிய ஆவ­ண­மான மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பான மூல ஆவ­ணங்­களை சட்ட ரீதி­யாக எவ­ரு­டைய பொறுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவை சரி­யான முறையில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான பதிவு சாட்­சி­யங்கள் இருக்­கின்­றதா?.விமா­னப்­ப­டையின் எந்த அதி­கா­ரியின் பொறுப்பில் ஆவ­ணங்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆவ­ணங்கள் காணாமல் போயுள்­ள­தாக தெரிந்து கொண்ட பின்னர், எடுத்த நட­வ­டிக்கை என்ன என்­பது குறித்த அறிக்­கையை எதிர்­வரும் 25ஆம் திகதி நீதி­மன்­றத்தில் முன்­வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

நிதி மோசடி விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் ஜய­சுந்­தர, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரான்சிஸ் ஆகியோர் விசா­ர­ணை­களின் முன்­னேற்றம் குறித்து நீதி­மன்­றத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

2006ஆம் ஆண்டு நான்கு மிக் விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்து சரி­யான முறையில் விசா­ரணை நடத்தி, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டால், முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் குடி­யு­ரிமை கூட ரத்துச் செய்­யப்­ப­டலாம் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06