பஞ்சாப்பின் வெற்றிக் கனவு கலைந்தது ; இரு ஓட்டத்தால் கொல்கத்தா வெற்றி

Published By: Vishnu

10 Oct, 2020 | 07:41 PM
image

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியானது 2 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது போட்டி ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே இன்று மாலை ஆரம்பமானது.

சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் சுப்மன் கில் 57 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 58 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 2 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களுக்கு 113 ஓட்டங்களை குவித்தது பஞ்சாப்.

ராகுல் 58 ஓட்டங்களுடனும், அகர்வால் 54 ஓட்டங்களுடனும் துடுப்பெடத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 15 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் அகர்வால் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த நிகோலஷ் பூரணும் சற்று நேரம் தாக்குப் பிடித்து 16 ஓட்டங்களை பெற்ற வேளையில் 17.2 ஆவது ஓவரில் சுனில் நரேனின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சிம்ரன் சிங் நான்கு ஓட்டத்துடனும், ராகுல் 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் பஞ்சாப் அணி 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை குவித்ததுடன், 6 பந்துகளுக்கு 14 ஓட்டம் என்ற இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டது.

ஆடுகளத்தில் மெக்ஸ்வெல்லும், மன்டிப் சிங்கும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் அந்த ஓவரக்கு  2 0 4 L1 W 4 என்ற ஓட்டமே முறையாக பெறப்பட்டு 2 ஓட்டங்களினால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.

ஆடுகளத்தில் மெக்ஸ்வெல் 10 ஓட்டங்களுடனும், ஜோர்தன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் பிரசீத் கிருஷ்ணா 3 விக்கெட்டுக்களையும், சுனில் நரேன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

இதேவேளை துபாயில் ஆரம்பமாகியுள்ள மற்றொரு போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58