அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கடந்த திங்கட்கிழமை  சடலமாக அவுஸ்திரேலியப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

 மல்லாவியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.