20 ஆம் திருத்தம் தொடர்பிலான வியாக்கியாணத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

Published By: Digital Desk 3

10 Oct, 2020 | 03:48 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்ட 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகளை தொடர்ந்து,  குறித்த திருத்தம் தொடர்பிலான தனது வியாக்கியாணத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

தமது அலுவலகத்துக்கு குறித்த வியாக்கியாணம் கிடைக்கப் பெற்றுள்ளதை உறுதி செய்த சபாநயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்வரும் 12 அம் திகதி திங்களன்று தனது அலுவலகத்துக்கு சென்ற பின்னர், அதனை படிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற திகதியான ஒக்டோபர் 20 ஆம் திக்தி முற்பகல் 10.00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர் உயர் நீதிமன்றின் வியாக்கியாணத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக  உத்தேச 20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்த நிலையில்  கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை சவாலுக்கு உட்படுத்தி, அரசியலமைப்பின் 121 ஆவது  உறுப்புரை பிரகாரம்  39 விசேட மனுக்கள்  உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த 39 மணுக்கள் மீதும் 20 இடையீட்டு மனுக்கள் அந்த உத்தேச மனுக்கள் மீது தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் அவை அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியர்சர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் 4 நாட்கள் பரிசீலிக்கப்பட்டன.

கடந்த 5 ஆம் திகதி அனைத்து தரப்புக்களினதும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில்,  6 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியுடன் அனைத்து எழுத்து மூல சமர்ப்பணங்களும் உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்ப்ட்டன. இந் நிலையிலேயே அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றம் தற்போது சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53