டெல்லியுடனான போட்டியில் ராஜஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி!

Published By: Vishnu

09 Oct, 2020 | 07:04 PM
image

ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 23 ஆவது ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.

சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களிறங்கவுள்ளது.

ராஜஸ்தானை பொருத்தரையில் முதல் ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக 216 ஓட்டங்களை குவித்தது, இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ஓட்டங்களை‘சேசிங்’ செய்தும் வெற்றி பெற்றது. 

அதன் பிறகு கொல்கத்தா, பெங்களூரு, மும்பைக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக தோற்று பின்தங்கியுள்ளது.

இப்போது மறுபடியும் சார்ஜாவில் கால்பதிப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் ராஜஸ்தான் வீரர்கள் களம் இறங்குவார்கள். 

தங்களது முதல் இரு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்தும், சஞ்சு சாம்சனும் மற்ற 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 

அவர்கள் இருவரும் போர்முக்க திரும்ப வேண்டியது அவசியமாகும். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் வந்தடைந்த ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்கார் பென் ஸ்டோக்சின் 6 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறை இன்னும் நிறைவடையாததால் அவர் இந்த ஆட்டத்தில் ஆட வாய்ப்பில்லை.

இது இவ்வாறிருக்க இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4 இல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிட இடத்தை பிடிக்கும்

டெல்லி அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, தவான், ரிஷாப் பந்த், ஹெட்மயர் அசத்துகிறார்கள். 

இதே போல் பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, அஸ்வின், ஸ்டோனிஸ் மிரட்டுகிறார்கள். 

ஐ.பி.எல். அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும், டெல்லி அணி 09 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05