கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் தனியார் பஸ் வண்டியொன்று வீதியின் அருகிலிருந்த பாரிய மரத்துடன்  மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் காயமடைந்த 14 பேரும்  தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.