கிளிநொச்சியில் வெவ்வேறு தாக்குதல்களுக்கு தயாராக இருந்த நால்வர் கைது

Published By: Digital Desk 4

09 Oct, 2020 | 10:50 AM
image

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதலில் ஈடுபட முயற்சித்த ஆவா  குழுவினர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்கள் நால்வர் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகை தந்திருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

நேற்று முந்தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கைதானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், மெலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06