இலங்கை மின்சாரசபை  181.4 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தை சந்தித்துள்ளது : டலஸ் அழகபெரும 

Published By: R. Kalaichelvan

08 Oct, 2020 | 01:13 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

கடந்த 2015 தொடக்கம் 2019 வரையில் இலங்கை மின்சாரசபை  181.4 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும், தேசிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இந்த கால எல்லைக்குள் புனரமைக்கப்படாதமையும், மின்சார கட்டணங்களில் எந்தவித மாற்றங்களும் செயாதமை மற்றும் மின்சார சபைக்கு அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமையுமே  பிரதான காரணம் என அரசாங்கம் கூறுகின்றது.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் இலங்கை மின்சார சபை எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள், நட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவித்த மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும கூறுகையில்,

இந்த நெருக்கடிக்கு நீர்மின்  உற்பத்தியில் ஆர்வம்  காட்டாமை,  டீசலுக்காக மாத்திரம் 100 பில்லியன் ரூபாய்களுக்கும்  அதிகமான தொகையை செலவு செய்துள்ள போதிலும் மின்சார கட்டணத்தில் விலை அதிகரிப்பு செய்யாதமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டு நுரைச்சோலை லக்- விஜய மின்நிலையம் உருவாக்கப்பட்ட பின்னர் இன்னமும் எந்தவொரு மின் உற்பத்தி  நிலையமும் புனரமைக்கப்படவில்லை.

மாறாக டீசல் பாவனையில் மின் உற்பத்தி செய்யப்பட்டே வருகின்றது. இதற்காக ஒரு அலகு  மின் உற்பத்திக்கு 23.29 ரூபாய்கள் செலவானாலும் மக்களிடம் ஒரு அலகு மின்னுக்காக 16.83 ரூபாய் என்ற அடிப்படையில் அறவிடப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்துமே அதிகரித்துள்ள போதிலும், மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை, அதேபோல் மின்சார சபையின் பல்வேறு செயற்பாடுகள் தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றமையும், அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இருப்பதும் கூட மின்சார சபை நட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்றுவரை 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். எனவே இந்த செயற்பாடுகள் காரணமாகவே இலங்கையில் மின்சார சபை நட்டத்தில் இயங்கிக்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58