புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை என்பன உயர்மட்ட பாதுகாப்புடன் நடத்தப்படும் : கல்வி அமைச்சின்  செயலாளர்

Published By: R. Kalaichelvan

08 Oct, 2020 | 12:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐந்தாம் ஆண்டு  புலமைபரிசல் பரீட்சை,  உயர்தர பரீட்சைகள் அதி கூடிய பாதுகாப்பு  மட்டத்தில்  நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு    இணையவழி ஊடாக விசேட  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.என கல்வி அமைச்சின்  செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான  நிலையில் பரீட்சைகளை  நடத்த  கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும்  எந்நிலையிலும்  தயாராகவே  இருக்கும், டெங்கு  , இயற்கை  அனர்த்தம ஏற்படும் காலக்கட்டத்திலும்  தேசிய பரீட்சைகளை வெற்றிகரமாக  நடத்தியுள்ளோம்.

பொதுத்தேர்தல் கொவிட் -19 வைரஸ் தொற்று பரவல்   வேளையில்   கோடிக்கணக்கான  மக்கள் பங்குப்பற்றுதலுடன்  வெற்றிகரமாக  நடத்தப்பட்டது.  இரண்டு பிரதான பரீட்சைகள்  இலட்சக்கணக்கான மாணவர்களை  உள்ளடக்கி  மிகவும் பாதுகாப்பான முறையில்   நடத்துவது  சாத்தியமானதே.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தரவு, மற்றும்  அவர்களின் சுய தகவல்களை கண்காணிப்பதற்கு    இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ளது. இவ்விடயத்தில்  பாடசாலை அதிபர்கள்  முதல் தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

திட்டமிடப்பட்ட வகையில் பரீட்சையை நடத்த இறுதி தீர்மானம் எடுத்தமை முதல் வெற்றியாகும்.    பரீட்சைகள் உயர் சுகாதார  பாதுகாப்பு   மட்டத்தில் நடத்தப்படும்.   இந்த அனுபவம் எதிர்காலத்திற்கும் ஒரு பாடமாக அமையும். ஏனெனில் கொவிட் -19 வைரஸ் பரவலுடன் வாழ வேண்டிய  சூழ்நிலையே காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10