அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் தென் ஆசியாவின் முதல் டிஜிட்டல் லொத்தர் DLB Sweep App 

Published By: Gayathri

08 Oct, 2020 | 01:35 PM
image

லொத்தர் வரலாற்றின் பாரிய தொழில்நுட்ப அடித்தளத்துடன் முதல் டிஜிட்டல் லொத்தராகிய 'சசிரி' லொத்தரினை சந்தைக்கு அறிமுகப்படுத்தல் இன்றையதினம் (2020.09.29) நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவின் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது.

அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட DLB Sweep App ஊடாக இன்றுமுதல் 'சசிரி' டிஜிட்டல் லொத்தர்களை கொள்வனவு செய்யமுடியும். 

அத்துடன் ராசி அதிர்ஷ்டம், சுப்பர் போல் மற்றும் சனிதாபோன்ற லொத்தர்களையும் Online இல் கொள்வனவு செய்யமுடியும்.

'சசிரி' லொத்தர் தென் ஆசியாவின் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான லொத்தர் ஆவதோடு அதனை Online ஊடாகவும், அச்சிடப்பட்ட லொத்தராகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

'சசிரி' லொத்தர் சந்தைக்கு வெளியிடப்பட்டதன் பிரதான நோக்கம், கடந்த கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கொவிட் நிதியத்திற்கு நிதி பங்களிப்பினை செய்வதற்காகும். 

அதற்கமைய இவ் லொத்தர் விற்பனையின் ஊடாக பெறப்படும் இலாபம் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்படுவதோடு, ஜனாதிபதி நிதியம் ஊடாக அந் நிதி கொவிட் நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இன்றையதினம் சந்தைக்கு வெளியிடப்படும் இவ் 'சசிரி' டிஜிட்டல் லொத்தரின் முதல் சீட்டிழுப்பு வருகின்ற ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதிலிருந்து வாரத்தின் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில், குறித்த சீட்டிழுப்பு நடைபெறும்.

அதன்போது மூன்று இலக்கங்களை பொருத்தி ஒரு இலட்சம் பரிசுகள் பலவற்றுடன் சிறுபரிசுகள் பலவற்றையும் வெற்றிக்கொள்ளும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

'சசிரி' டிஜிட்டல் லொத்தர் ஊடாக பரிசுகளை வெல்லும் வெற்றியாளர்களுக்கு குறித்த பணத்தினை அவர்களின் வங்கி கணக்குகளுக்கே வைப்பிடக்கூடியவாறு கணினி தொழில் நுட்பத்தினூடாக செயற்படுத்தப்படுகின்றது.

அச்சிடப்பட்ட லொத்தர்களுக்குரிய பரிசுகள் வழமைப்போல் விநியோக விற்பனை முகவர்களிடம் அல்லது பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

தற்போது காணப்படும் சம்பிரதாயபூர்வ லொத்தர் சீட்டிழுப்பிற்கு அப்பாற்பட்டு புதிய டிஜிட்டல் தொழில் நுட்பங்களுடன் இச் சீட்டிழுப்புக்கள் நடைபெறவுள்ளதென அபிவிருத்தி லொத்தர் சபை அறிவிக்கின்றது.

லொத்தர் சந்தையில் புரட்சிகரமான புதிய அனுபவத்துடன் உங்களிடம் வரும் 'சசிரி' டிஜிட்டல் லொத்தரினை கொள்வனவு செய்வதற்கு www.dlb.lk/apps என்ற லிங்க்கினை பயன்படுத்தி உங்களின் ஸ்மார்ட் கைத்தொலைபேசியினூடாக அல்லது டெப் இயந்திரத்தினூடாக DLB Sweep App செயலியினைதரவிரக்கம் செய்து ஜிட்டல் மயமாக்கப்பட்ட அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கிக்கொள்ளுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை தனது லொத்தர் கொள்வனவாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58