லண்டனில் தழிழ் தம்பதியினர் குழந்தையுடன் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 02:57 PM
image

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள பிரெண்ட்போர்டில் அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சடலாமாக மீட்கப்பட்டுள்ளது.

சடலாமாக மீட்கப்பட்டவர்கள் கணவர் குகராஜ் சிதம்பரநாதன் (வயது 42), மனைவி பூர்ணா காமேஷ்வரி சிவராஜ் (36), மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோராவர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட பூர்ணா பற்றி திடீரென எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் அவரது உறவினர் கவலையோடு, லண்டன் பெருநகர பொலிஸை தொடர்பு கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார்.

திங்கட்கிழமையன்று பொலிஸாரும் அந்த வீட்டாருடன் பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் பொலிஸார் அந்த குடியிருப்புக்கு சென்றனர்.

கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற பொலிஸார் அங்கு பூர்ணாவும், அவரது மகன் கைலாசும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டனர்.

குகராஜ் சிதம்பரநாதன் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பொலிஸார் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவரும் இறந்து விட்டார்.

இது குறித்து விசாரித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மனைவியையும், குழந்தையையும் கொன்று விட்டு, கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு கணவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17