வோட்சன் - டூப்பிளஸ்ஸி ஜோடியின் அதிரடி தொடருமா? ; நாணய சுழற்சியில் கொல்கத்தா வெற்றி

Published By: Vishnu

07 Oct, 2020 | 07:03 PM
image

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் 21 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

அபுதாபயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

சென்னை அணியை பொருத்தவரையில் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினாலும் அடுத்த மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவியது. 

இதனால் பல்வேறு விமர்சனங்களும் சென்னை அணிக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. 

எனினும் இரு தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி இருவரும் இணைந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த 179 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை துடைத் தெறிந்தனர்.

இதனால் சென்னை அணியின் நம்பிக்கையும், உத்வேகமும் அதிகரித்துள்ளது. அது மாத்திரமன்றி கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் வோட்சன் - டூப்பிளஸ்ஸி ஜோடியின் அதிரடி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இதுவரை 3 அரைசதத்துடன் 282 ஓட்டங்களை குவித்துள்ள டூப்பிளஸ்ஸி இன்றைய ஆட்டத்தில் 23  ஓட்டங்களை எடுத்தால் செம்மஞ்சள் நிற தொப்பியை வசப்படுத்துவார்.

கொல்கத்தா அணியை பொருத்தவரையில் முந்தைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 229 ஓட்ட இலக்கை நோக்கி விளையாடி 18 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரை மாற்ற வேண்டும், மோர்கன், ரஸல்லுக்கு பிறகே அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். 

இதனால் கொல்கத்தா அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. 

சுப்மான் கில், மோர்கன், நிதிஷ் ராணா, ரஸ்ஸல் என்று அந்த அணியில் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் இவர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம் தான் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49