சுனாமி மகன் சர்ச்சை வழக்கில் திருப்பம் : சிறுவயதில் பிரிந்துசென்ற தந்தையர்களும் நீதிமன்றில் ஆஜர்

Published By: Digital Desk 4

07 Oct, 2020 | 06:47 PM
image

சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும் தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த  2 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.

அம்முறைப்பாட்டுக்கு அமைய இன்று (7) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறி கொடுத்ததாகத் தெரிவித்த மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா ஆகியோருடன் அவர்களை விட்டு பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற அவர்களின் கணவன்மார்களும் ஆஜராகி இருந்தனர்.

உண்மையான பெற்றோர் யார் என்பதை அறியும் மரபணுசோதனை செய்ய தேவையான  செலவை ஒரு மாதகால இடைவெளியில் திரட்டுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அப்பணத்தை  கூழித்தொழிலாளியாக உள்ள என்னால் திரட்ட முடியாது என சியானின் தந்தை எச்.எம்.எம்.அமீர் தெரிவிக்க, நவம்பர் 24ஆம் திகதி வரை இரு தரப்பினருக்கும் பணம் திரட்ட காலவசாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பெற்றோர் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கான போக்குவரத்து செலவை மாளிகைக்காட்டு தாயான கமாலியாவின் கணவர் (பிள்ளையின் தந்தை) ஏ.ரஸீன் பொறுப்பேற்பதாக  தெரிவித்தார்.

வழக்கு விசாரணை முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  சியானின் தந்தை எச்.எம்.எம்.அமீர், DNA பரிசோதனை செய்ய சுமார் 30ஆயிரம் அளவில் செலவாகும் என்கிறார்கள். அந்தளவிற்கு என்னால் பணத்தை திரட்ட முடியாது என்றார்.

16 வருடங்களுக்கு முன்னர் சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா, இப்போது இருப்பது தனது மகன் றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் தான் எனவும், வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும்  நூறுல் இன்ஷான் என்பவர் இவர் தனது மகன் முகம்மட் சியான் எனவும் வாதாடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57