கொரோனாவிற்குள் அரசியலமைப்புத் திருத்தம் வேண்டாம் :  கரு ஜயசூரிய

Published By: R. Kalaichelvan

07 Oct, 2020 | 04:14 PM
image

(நா.தனுஜா)

நாடு மீண்டும் கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் வேளையில், அரசியலமைப்புத் திருத்தங்களை ஏற்படுத்தல் அல்லது அதனையொத்த வேறு அரசியல் காரணிகளை மையப்படுத்தி நேரத்தை விரயம் செய்துகொண்டிருப்பது பொருத்தமானதல்ல என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்மையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருப்பது அசாதாரணமான விடயமாகும். தற்போதைய சூழ்நிலையில் மக்களால் முறையான சுயசுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஊரடங்குச்சட்டம் உட்பட வேறு எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளும் பயன்தராது. எனவே அனைவரும் இதனை அலட்சியம் செய்யாமல் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று எமது நாடு ஏற்கனவே ஒருமுறை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. எனவே எம்மால் மீண்டும் அதனைச் செய்யமுடியும்.

முதலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் குறைகூறுவதை நிறுத்திவிட்டு, நோயாளர்களைப் பாதுகாப்பதற்கும் மேலும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், நாமனைவரும் அச்சமடையாமல் ஒருமைப்பாட்டுடன் செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

நாடு மீண்டும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் வேளையில், அரசியலமைப்புத் திருத்தங்களை ஏற்படுத்தல் அல்லது அதனையொத்த வேறு அரசியல் காரணிகளை மையப்படுத்தி நேரத்தை விரயம் செய்துகொண்டிருப்பது பொருத்தமானதல்ல.

தெற்காசியப்பிராந்தியம் முழுவதுமே வைரஸ் பரவலினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகமோசமான தலைவிதிக்கு உட்படாதிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலையில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தீ...

2024-04-16 16:11:24
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10