இந்திய பிரஜைகள் மூலமாகவா கொரோனா பரவியது?- அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்கிறது எதிர்க்கட்சி

Published By: Gayathri

07 Oct, 2020 | 04:45 PM
image

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 பரிசோதனை செய்யாது இந்திய பிரஜையோ அல்லது இந்திய பிரஜைகள் குழுவொன்றோ குறித்த தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே மீண்டும் இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவியதாக கூறுகின்றனர். 

இந்த விடயம் உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்து சுகாதார அமைச்சர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். 

இந்தியாவின் பிரஜைகள் இலங்கைக்குள் வந்தார்கள் என்றால் யாருடைய அனுமதியுடன் வரவழைக்கப்பட்டனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் சிறப்பு கூற்றொன்றை எழுப்பி கொவிட் -19 வைரஸ் பரவல் நிலவரம் குறித்து சபையில் கேள்வி எழுப்பினார். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,

திவுலபிட்டிய பிரதேசத்தில் கொவிட் 19 கொத்தணியின் பரவல் அதிகரித்துள்ளது. கொத்தணியில் இருந்து சமூக பரவலாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்தாக உள்ளது. 

ஆகவே, கொவிட் தொற்றாளர்களுக்கான கட்டில்கள், வெண்டிலேடர்கள் போதாமையும், மருத்தவ வசதிகள் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றது. 

முதலாம் படிமுறை பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இடம்பெறவில்லை. இது மோசமான நிலைமையை உருவாக்கும். 

அதுமட்டுமல்ல, இப்போது அடையாளம் காணப்பட்ட பெண் முதல் நபர் அல்ல. முதலில் யாருக்கு பரவியது என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நெருக்கடிகளில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் உருப்படியான பதில் ஒன்றும் கூறவில்லை. 

உண்மையான நிலவரம் என்ன? அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன,என்பது குறித்து இன்னமும் பேசவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாம் இந்த வைரஸ் பரவலின் அச்சறுத்தல் நிலைமைகள் குறித்து பேசியபோது ஆளும் தரப்பினர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். 

பொதுத் தேர்தல் காலத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அரசாங்கம் கூறியது.

அப்படியென்றால் மீண்டும் எவ்வாறு இவ்வாறான வைரஸ் பரவல் ஏற்பட்டது. எந்தவித பரிசோதனையும் செய்யாது, கொவிட்-19 பரிசோதனை செய்யாது இந்திய பிரஜையோ அல்லது இந்திய பிரஜைகள் குழுவொன்றோ குறித்த தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே மீண்டும் இலங்கையில் கொவிட் வைரஸ் பரவியதாக கூறுகின்றனர். 

இந்த விடயம் உண்மையா? அல்லது வதந்தியா? என்பது குறித்து சுகாதார அமைச்சர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

மனுஷ நாணயக்கார எம்.பி கூறுகையில்,

நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மை என்றால், எந்தவித தனிமைப்படுத்தல் நடவடிக்கைளும் இல்லாது, விமான நிலையத்தில் எந்த பரிசோதனைகளும் செய்யாது, யாருடைய அதிகாரத்திற்கு அமைவாக இந்திய பிரஜைகள் குறித்த ப்றேண்டெக்ஸ் நிறுவனத்திற்கு அழைத்துவரப்பட்டனர். 

குறித்த நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் மூலமாகவே இவர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறுகின்றனர். முதலில் இது குறித்து ஆராயுங்கள். எங்கிருந்து மீண்டும் கொண்டுவரப்பட்டது என ஆராயுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51