பிரதமருக்கு சஜித் வெளியிட்டுள்ள அறிக்கை

Published By: Digital Desk 3

07 Oct, 2020 | 10:49 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொய்யான அறிக்கைளை   வெளியிட்டு  நாட்டு மக்களை தவறான முறையில்  வழிநடத்த வேண்டாம்.கணக்காளர் நாயகம்  தொடர்பான  விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றின்  நிதி கட்டுப்பாட்டை குறைமதிப்பிற்கு  உட்படுத்தும் அரசாங்கத்தின் சதிக்கு எதிராக  அனைத்து சக்திகளும் ஒன்றினைய  வேண்டும் என  எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்    அரச கணக்காளய்வுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும்,  எதிர்க்கட்சினர் போலியான  விடயங்களைகொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அறிக்கை  வெளியிட்டுள்ளார். உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றும்  வகையில் வெளியிடப்பட்டுள்ளது.  என்பதை குறிப்பிட வேண்டும்.

பிரதமரால்    வெளியிடப்பட்ட அறிக்கையில்    கணக்காளர் நாயகத்தின்    செயற்பாடும்.    பொது சேவை ஆணையாளரின்        செயற்பாடும்  ஒப்பிடப்பட்டுள்ளது.ஆனால் பொது தணிக்கையில் நிர்வாக சுதந்திரத்தை நிறுவுதல் ,   நிதி சுதந்திரம் மற்றும் செயல்பாட்டு சுதந்திரத்தை உருவாக்குதல் மற்றும் பொது தணிக்கையின் தர மேம்பாட்டிற்கான சர்வதேச அமைப்புகளின் மரபுகளுடன் இணங்குதல் கணக்காளர்  நாயகத்தின்  தயாரிப்பு வரை பரந்த அளவிலான விடயங்களை  ஒப்படைத்துள்ளது  என்பதை     சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜனாதிபதி   செயலாளர் காரியாலயம்,  பிரதமர் காரியாலயம் மற்றும்  அமைச்சரவை அமைச்சர்களின்  காரியாலயம் ஆகியவை  அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்  154 (1) அத்தியாயத்தின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தில் இதனை நீக்குவது சாதாரணம் என பிரதமர்  சுட்டிக்காட்டியுள்ளார். அரச நிறுவன கணக்காய்வு  தொடர்பில்    20 ஆவது திருத்தத்தில்  விதிக்கப்பட்ட  நீக்கம் தொடர்பிலும்,    அதற்கான   காரணத்தையும் பிரதமர்   தெளிவுப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பின்154 (1) திருத்தத்தின் மூலம் கணக்காளர்  கணிக்கையில்  சேர்க்கப்பட்ட  50மூ க்கும் மேற்பட்ட விடயதானங்கள்      அரசியமைப்பின்  20  ஆவது திருத்தத்தில்    கணக்காளர்   நாயகத்திடமிருந்து  நீக்கப்பட்டுள்ளது.     இருப்பினும்   பிரதமரின் அறிக்கையில்  154 (2) வது பிரிவு   பொது நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் நிறுவனத்தின் கணக்காளர்  கணக்காளர்  நாயகம்    அல்ல ஏனெனில் நிதி அமைச்சர் மற்றும்   கணக்காளர்  நாயகத்தை    அணுகவும்  கணக்காய்வு    ஒரு தனியார் கணக்காய்வு   நிறுவனத்திற்கு  மேற்பார்வையின் கீழ் வழங்கவும் வாய்ப்புள்ளது.

பொய்யான   அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமும்  ,  பொதுமக்களை தவறாக வழிநடத்த   வேண்டாம். மூலமும் 20 ஆவது திருத்தம்    ஊடாக     கணக்காளர்  நாயகத்தை    பலவீனப்படுத்த வேண்டாம்  பொது தணிக்கை தொடர்பான விதிகள் அடங்கிய 153 மற்றும் 154 பிரிவுகளில் திருத்தம் செய்யக்கூடாது என்றும் அரசாங்கத்தை  குறிப்பாக பிரதமரை கேட்டுக்கொள்கிறோம்.   கணக்காளர்  நாயகத்தை    பலவீனப்படுத்துவதன் மூலம் பாராளுமன்ற நிதி கட்டுப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் சதியை தோற்கடிக்க அனைத்து சக்திகளையும் அழைக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32