ஆபிரிக்காவில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இறப்பதற்கு எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஒரு பிரதான காரணமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நிறுவனத்தின் தலைவர் அந்தோனி லேக் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டிலிருந்து பலியானவர்களின் எண்ணிக்கையானது, இரண்டு மடங்கை விடவும் அதிகரித்துள்ளதாக லேக் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்ட உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.