புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை.!

Published By: J.G.Stephan

06 Oct, 2020 | 12:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக  யாகொட தொடக்கம்  வதுரவ வரையிலான  புகையிரத    நிலையங்களில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறார்கள். பாதுகாப்பினை உறுதிப்படுத்த புகையிரத பாதுகாப்பு தரப்பினர் இனிவரும் நாட்களில் கடுமையான முறையில்  செயற்படுவார்கள் என புகையிரத திணைக்கள பொது  முகாமையாளர்  டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதான  புகையிரத பாதைகளாக கருதப்படும்  யாகொட, வதுர ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட  கம்பஹா,     தரலுவ, பெம்முல்ல, மஹலேகொட, ஹின்தெனிய, பட்டியகொட, வெயாங்கொட ஆகிய  புகையிரத நிலையங்களில் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரதங்கள் எச்சேவைக்காகவும் நிறுத்தப்படமாட்டாது.

சுகாதார பாதுகாப்பு தரப்பினர் வழியுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை    கடுமையான பின்பற்றுமாறு அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளோம். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகளவான  பயணிகள் ஒரே  நேரத்தில் கூடுகிறார்கள். கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு  அறிவுறுத்தல்களை பின்பற்றாது பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

 புகையிரத நிலையங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவம் பொறுப்பு புகையிரத திணைக்களத்துக்கு உண்டு ஆகையால் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுபவர்கள்  புகையிரத நிலைய பாதுகாப்பு தரப்பினரால் புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.    அறிவுறுத்தல்கள் கடுமையான செயற்படுத்த வேண்டிய தேவை எழும் போது  அனைத்து அதிகாரங்களையும் புகையிரத திணைக்கம்  பிரயோகிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04