வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 3

06 Oct, 2020 | 11:14 AM
image

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான  வெள்ளை மாளிகையின் முக்கிய பல உயர் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அமெரிக் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்குப் பிறகு, 32 வயதான வெள்ளை மாளிகையின் அதிகாரியான இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி

இந்நிலையில்,கெய்லீ மெக்னானி தனது டுவிட்டர் பதிவில்,

"வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகத பின்பு, திங்கள்கிழமை காலை எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையில்கொரோனா தொற்று உறுதியானது" என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் மெக்னானி தெரிவித்துள்ளார்.

"வெள்ளை மாளிகை மருத்துவ பிரிவினால் எந்தவொரு நிருபர்களும், தயாரிப்பாளர்களும் அல்லது பத்திரிகை உறுப்பினர்களும் நெருங்கிய தொடர்புகளாக பட்டியலிடப்படவில்லை ," என்று அவர் தெரிவித்துள்ளார்.

"மேலும், மேலும், வியாழக்கிழமை ஒரு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பு ஹோப் ஹிக்ஸ் நோயறிதலைப் பற்றி எனக்குத் தெரியாது," என்று அவர் தெரிவித்துள்ளார். (அன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பைக் குறிப்பிடுகையில், அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை)

ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியின் நெருங்கிய உதவியாளரான ஹோப் ஹிக்ஸ், கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஆவார். 

அதன்பிறகு, ட்ரம்பும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

"ஒரு முக்கிய பணியாளர் என்ற முறையில், இந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க நான் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளேன். எனது சமீபத்திய கொரோனா தொற்று சோதனையின் மூலம் நான் தனிமைப்படுத்தல் செயல்முறையைத் தொடங்குவேன், தொலைதூரத்தில்  இருந்து அமெரிக்க மக்கள் சார்பாக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரையன், துணைத் தலைவர் மைக் பென்ஸின் பத்திரிகை செயலாளர் கேட்டி மில்லர் மற்றும் ட்ரம்ப் உதவியாளர் நிக் லூனா உள்ளிட்ட பல வெள்ளை மாளிகை ஊழியர்கள் சமீபத்திய மாதங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டு இதுவரை 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47