கண்டி வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர்கள் இன்று மதிய உணவு வேளையின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தமது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓய்வூதியத்தில் கை வைக்காதே, எட்டு மணி நேர வேலையை உறுதி செய், 2016  முதல் சேர்த்துக் கொள்ளும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை உறுதி செய், வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்னை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்து, அதற்கு ஏற்ப வாழ்க்கை செலவை பெற்றுத் தரவும், தற்போதைய வாழ்க்கை செலவுக் கொடுப்பனவுகளை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடு" போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் ஏந்தி இருந்தனர். சுமார் 1000 கனிஷ்ட ஊழியர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

(வத்துகாமம் நிருபர்)