20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட் மனு மீதான பரிசீலனை நிறைவு

Published By: Vishnu

05 Oct, 2020 | 08:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று நிறைவுக்கு வந்தன.  

மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்ப்ட்டுள்ள சட்ட மா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றில் இன்றும் முன்வைக்கப்பட்ட நீண்ட வாதங்களுடன்   மனுக்கள் மீதான பரிசீலனைகள் நிறைவுக்கு வந்தன.  

இதனையடுத்து நாளை 6 ஆம் திகதி பி.ப.3.00 மணிக்கு முன்னர் மனுக்கள் தொடர்பிலான அனைத்து எழுத்து மூல சமர்ப்பணங்களையும்  மன்றில் சமர்ப்பிக்க அனைத்து தரப்பினருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந் நிலையிலேயே 20 ஆம் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் தீர்ப்பானது ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய திறந்த மன்றில் அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121 ஆவது  உறுப்புரை பிரகாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த 39 விசேட மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியர்சர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்  கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையிலேயே இன்று நான்காவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11