19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க தயார் - வடிவேல் சுரேஸ் 

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 07:58 PM
image

19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்திற்கு மலையக மக்களின் பிரதநிதி என்ற வகையில் ஆதரவளிக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் வைத்து இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

"19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்தை ஆதரிக்க தயார். அதுவே எனது நிலைப்பாடு. இருபதாவது திருத்தத்தில் என்ன உள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதேபோல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணைக்கையை அதிகரிப்பதாகவும் கூறினால். இரு கரங்களை உயர்த்தி இருபதை ஆதரிக்க தயார். ஆனால் உப்புச் சப்பு இல்லாத தெளிவாக சொன்னால் தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க தயாரில்லை. தமிழ் மக்குகளால் பாராளுமன்றம் சென்ற எவரும் 20 வாசித்து புரிந்திருந்தால் அதனை ஆதரிக்கமாட்டார்கள்."

இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் மூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அவரிடம் ஊடகியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர்.

"இது தொடர்பில் தீர்மானிக்க முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழில் அமைச்சர் இரண்டு வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளார். அது தொடர்பில் முடிவெடுக்க வழங்கப்பட்ட இருவாரத்தில் 4 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் உள்ளன. எனவே அவர்களின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். இது தொடர்பில் செயலாற்ற அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சி என்றவகையில் எமக்கும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. 

ஆகவே பெருந்தோட்ட  தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் மேல் வழங்க வேண்டும். முதலாளிமார் சம்மேளனம் மனிதாபிமாகமாக நடந்துக்கொள்ள வேண்டும். ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க எவர் முன் வந்தாலும் அதனை ஆதரிக்க தயார். இன்னும் 10 நாளில் சாதகமான பதில் கிடைக்காவிடின் பாரிய ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த தயார்"

இதேவேளை சுத்தமானவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதில் தவறில்லை எனவும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டால் அதற்கு எதிராக செயற்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50