சமரசத்திற்கு வராத இளம்பெண் மீண்டும் பாலியல் பலாத்காரம்

Published By: Raam

18 Jul, 2016 | 05:44 PM
image

மூன்று ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான இளம் பெண் ஒருவர், அதே குழுவினால் மீண்டும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே 5 நபர்களால் கடந்த 2013 ஆம் ஆண்டும் குறித்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார்.

கடந்த 2013 ஆண்டு பிவாடியில் வசித்து வந்த இந்த இளம்பெண்ணை 5 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவரும்  பிணையில் வெளியில் வந்து இந்த வழக்கை முடித்து கொள்ள வேண்டுமென பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தை வலியுறுத்தியுள்ளனர்.  ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. 

இதை தொடர்ந்து குற்றவாளிகள் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பம் ரோஹ்தக் நகருக்கு மாறி உள்ளனர். 

இந்த நிலையில் பாடசாலைக்கு  கடந்த புதன் கிழமை சென்ற பெண்ணை  5 பேரும் கடத்தி சென்று, அப்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து மயங்கிய பின் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

குறித்த மாணவி மயக்கமுற்ற நிலையில் கண்டுபிடிக்ககப்பட்டு தற்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீப ஆண்டுகளில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெரிதும் அறியப்பட்ட பிரச்சினையாக உள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம், நாடு தழுவிய எதிர்ப்புக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13