மீண்டும் அதே தவறுகளை செய்கிறோம்- தோனி

Published By: Gayathri

04 Oct, 2020 | 05:35 PM
image

மீண்டும் அதே தறுகளை செய்வதால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைய நேர்ந்ததாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி கவலை தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடைபெற்ற 14 ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164  ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்று 7  ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சென்னை அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை தழுவியது. ஆரம்பப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. 

2 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸிடம் 16  ஓட்டங்களிலும்,  3 ஆவது  போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிடம் 44  ஓட்டங்களிலும் தோல்வியடைந்திருந்தது.

ஐதராபாத் அணியிடம் அடைந்த தோல்வி குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி கூறியுள்ளதாவது,

“என்னால் நிறைய பந்துகளை சரியாக துடுப்பெடுத்தாட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். 

ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.

நாங்கள் நிறைய வி‌டயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. பிடிகளை தவறு விடுவது, முறையற்ற பந்து (நோ போல்) வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.

நாங்கள் அதே தவறை மீண்டும் செய்துள்ளோம். 16 ஆவது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக போட்டியில் இன்னும் மேம்பட வேண்டும்.

மேலும், இங்குள்ள வெப்பநிலைக்கு எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. 

இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்துகொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 2 ஆவது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணித்தலைவர் டேவிட் வோர்னர் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 150 ஓட்டங்களுக்கு  மேல் எடுப்பது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58