முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த மாதம் முதலாம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த பசில் ராஜபக்ஷவை நிதி மோசடி பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.