சிங்கப்பூரில் எறும்புகள் விற்பனை நிலையம்! உண்பதற்கு அல்ல..

Published By: Jayanthy

04 Oct, 2020 | 01:03 PM
image

வீட்டில் படையெடுக்கும் எறுபுகளை விரட்டுவதற்கு பலவிதமான யோசனைகளை நாம் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் எறும்புகள் செல்லபிராணிகளாக விற்பனை செய்யப்படுகின்றன.

சிங்கப்பூரின் ஒரு சந்தை தொகுதியில் உள்ள  கடைக்கு வெளியே எறும்புகள் நிறைந்த பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள. 

ant-repreneur gallery

இது எறும்புகளை செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யும் கடை, பலரும் இதனை பரிசு பொருளாக தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கு வாங்கிச்செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இங்கு சுமார் 30 முதல் 40 எறும்பு- இனங்கள், காணப்படுகின்றன. இவ் எறும்புகள்  சிறப்பு குழுவினரால்  சிங்கப்பூரைச் சுற்றி பல இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவ் உயிரினங்களைப் பிடிப்பது எளிதான காரியமல்ல என, குறித்த கடையின் விற்பனையாளர் தெரிவிக்கின்றார்.

ant-repreneur gallery

எறும்புகளைப் பிடிப்பதற்கான மினி கையடக்க வெற்றிடங்கள், சிறிய உணவுகள் மற்றும் இறையாகப் பயன்படுத்தப்படும் உணவுப் புழுக்கள் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களுடன் எறும்பு பண்ணைகளுக்கு தேவையான அனைத்தையும் இந்த கடை விற்பனை செய்கிறது. 

ant-repreneur gallery

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட இவ் விற்பனை நிலையம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதேவேளை, இங்கு வணிகம் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ant-repreneur gallery

எனினும், பெரும்பாலான சிங்கப்பூரர் வாசிகள்  உண்மையில் எறும்புகளை வைத்திருக்கக்கூடாது, ஏனெனில், எறும்புகள் விஷம் மட்டுமன்றி அவை அழுக்கு, அருவருப்பானவை, நோய்களைச் சுமக்கின்றன" என்றும் ஒப்புக்கொள்கின்றனர்.

ant-repreneur gallery

முக்கிய செய்திகள்

icon-left
icon-right