நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஜேர்மன் அரசின் நிதியுதவியுடன் 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை, ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை இன்று காலை திறந்து வதை;து உரையாற்றும் போதே  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் கவலையளிக்கின்றது.  இவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத்திய நிலையங்களாக இயங்க வேண்டும்.  அதேவேளை பாடசாலை கல்வித் திட்டத்தில் தேசிய நல்லிணக்கமும் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும். 

நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிங்கள பௌத்த மக்கள் இந் நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும். வடபகுதி மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக் கொள்வதே பிரச்சினையை தீர்ப்பதற்கான முதல் வழியாகும். 

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய உறுதிமொழிகளையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன் என்றார்.