கொட்டகலையில் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் :  மக்கள் அச்சத்தில்!

Published By: R. Kalaichelvan

03 Oct, 2020 | 03:30 PM
image

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை எடுத்து செல்வதனை நாம் கடந்த காலங்களில் ஊடகங்களுடாக வெளிப்படுத்தியிருந்தோம்.

எனினும் இது குறித்து வனபாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 01.10.2020 அன்று இரவு வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டினுள் வருகை தந்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்றினை கவ்விச் செல்வது அந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி கமாராவில் பதிவாகியுள்ளன.

இந் நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால்  நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தைகள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளை, கோழிகூண்டினை உடைத்து கொண்டு செல்வதனை சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொது மக்கள் உயிர்களுக்கும் சிறுத்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09