எத்தியோப்பிய பிரபல பாடகர் படுகொலை ; நால்வர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு

Published By: Vishnu

03 Oct, 2020 | 03:01 PM
image

எத்தியோப்பியா பிரபல அரசியல் பாடகரின் கொலை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் மீது வெள்ளிக்கிழமை பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அந் நாட்டு சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தினடம் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் ஓரோமோ இனத்தைச் சேர்ந்த பொப் பாடகர் 'ஹாகலூ ஹுண்டீசா' எத்தியோப்பியாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி அடையாளம் தெரியாத தாக்குதல்தாரர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதனால் எத்தியோப்பியாவில் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இனப் பதற்றங்கள் அதிகரித்தன. 

குறிப்பாக அடிஸ் அபாபா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரோமியா பிராந்தியத்தில் 178 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம் எத்தியோப்பியாவின் மிகப்பெரிய இந்த போராட்டங்களுக்குப் பின்னர் அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 9,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம், வன்முறை தொடர்பாக 2,000 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அவர்களில் முக்கிய ஊடக மொகுல் மற்றும் ஒரோமோ எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜவார் முகமது ஆகியோர் பயங்கரவாத எதிர்ப்பு, தொலைத் தொடர்பு மோசடி மற்றும் துப்பாக்கி சட்டங்களை மீறியதாகவும் குற்றம் சட்டப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08