கஞ்சா சோதனைகளுக்காகச் சென்ற அம்பாறை குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சம்மாந்துறையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.