அரசியலமைப்பினை மறுசீரமைப்பு செய்வதை காட்டிலும் கல்வி மறுசீரமைப்பு எதிர்காலத்தை பலப்படுத்தும் - பிரதமர்

Published By: Digital Desk 3

02 Oct, 2020 | 04:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிறுவர்கள்    சுதந்திரமாகவும்,  மகிழ்ச்சியாகவும் கல்வி  கற்கும் விதத்தில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படுதல் அவசியமாகும். அரசியலமைப்பினை     மறுசீரமைப்பு செய்வதை காட்டிலும் கல்வி மறுசீரமைப்பு எதிர்காலத்தை பலப்படுத்தும் என  பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார்.

சர்வதேச  சிறுவர் தினத்தை  முன்னிட்டு    இன்று (02.10.2020) அபேகம  பாரம்பரிய அருங்காட்சியகத்தில் இடம்  பெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்   பிரதமர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச  சிறுவர் தினத்தை முன்னிட்டு    நாடு தழுவிய  ரீதியில் முன்னெடுக்கப்படும்      இடம் பெறும் நிகழ்வுகள்  மகிழ்வுக்குரியது.     சிறுவர்கள் நாட்டின்   சொத்தாகவே கருதப்படுகிறார்கள்.     எதிர்கால தலைவர்களை  சிறந்த முறையில் உருவாக்கும் பொறுப்பு  சமூகம்,  அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை  சிறந்த முறையில் முன்னெடுக்கும்.

15 வருடங்களுக்கு  அதாவது 2005ம் ஆண்டுக்காலப்பகுதியில்   நாட்டில்   காணப்பட்ட  சூழ்நிலையை     இன்றைய  சிறுவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டார்கள்.  வரலாற்றினை  மாணவர்கள் தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.    30வருட கால யுத்த சூழல்   2005 ஆம்   ஆண்டு  காலப்பகுதியில் உக்கிரமடைந்தன.    அனைத்து இன மக்களின்  பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த   வேண்டிய     பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

யுத்த காலத்தில்   பலர்   அநாதை இல்லங்களில்  பிறந்தார்கள். பலர்    முகாம்களில் இருந்து   இலவச   கல்வியை பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான  பின்னணியில் யுத்தம் பலரது  உயிர் தியாகங்களுக்கு மத்தியில்   கொணடு வரப்பட்டது.  யுத்த கால சூழல்  மிகவும் கொடுமையானது.        நாட்டு மக்கள் அனைவரும் முதலில்  தாய் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்  இன , மத, மொழி  ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக   தாய் நாட்டைக் கருத வேண்டும்.

கொவிட்ட- 19 வைரஸ்  தாக்கல் கல்வி துறையில்    சவாலை  ஏற்படுத்தியது.     நவீன     தொழினுட்ப   வசதிகள் ஊடாக  நெருக்கடியான   சூழலில்   மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள்.  சிறுவர்கள், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும்    கல்வி கற்க வேண்டும்  என்பதற்காக    கொவிட்-19 வைரஸ் நெருக்கடியான  நிலையிவ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு   பாடசாலைகள் மீள திறக்கப்பட்டன.

அனைத்தையும்  மீண்டும் ஆரம்பத்தில் இருந்து   முன்னெடுக்க வேண்டிய  தேவை தற்போது காணப்படுகிறது.    பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்   பாடசாலை  சீறுடை துணி  உள்நாட்டில் தயாரிக்க  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.     சிறுவர்களின் பாதுகாப்பிற்கு  அரசாங்கம் எந்நிலையிலும் முன்னுரிமை வழங்கும். இலவசகல்வியை   சிறுவர்கள்  முறையாக பெற்று   சிறந்த  பிரஜையாகி    நாட்டை பொறுப்பேற்க வேண்டும் . என்றார்.

2020ம் ஆண்டு சர்வதேச சிறுவர் தினத்தை  முன்னிட்டு பிரதமர்  இவ்விழாவின் போது விசேட முத்திரை  வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13