ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கட்ட சர்வதேச பிடியாணை உத்தரவை நிராகரித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது

 காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யுமாறு கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே இன்று அவ் உத்தரவை நிராகரித்துள்ளது.