வீதியை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் : மக்கள் விசனம்!

Published By: R. Kalaichelvan

02 Oct, 2020 | 01:19 PM
image

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக `ஹட்டன் செல்லும் பாதை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாகவும், எனவே, வீதியை புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்,  டயகம - அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் இன்று காலை பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கவலையுடனும், கொதிப்படைந்த நிலையிலும் காணப்படுகின்றனர். வீதி அகலப்படுத்தப்படாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

" இவ்வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம். இதற்கு முன்னரும் விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கின்றனர். தொழிலுக்கு செல்பவர்களும் இருக்கின்றனர். விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர். எனவே, இனியும் விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக வீதியை அகலப்படுத்திக்கொடுப்பதற்கும், குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்." எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு,

" ஒன்றரை வருடங்களுக்கு முன் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது. அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

அதுமட்டுமல்ல மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

விபத்து இடம்பெற்றதும் கதைப்பதில் பயனில்லை, எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்பு பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இன்று நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியைமூட நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28